Latestமலேசியா

தெலுக் இந்தானில் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு மாணவர் உயிரிழப்பு

தெலுக் இந்தான், மார்ச்-10-பேராக், தெலுக் இந்தானில், உயரமான கிளைகளை வெட்டப் பயன்படுத்தப்படும் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு, தொழில்பயிற்சி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Kampung Selabak, Batu 4 எனுமிடத்தில் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓர் ஆடவர் தூக்கிச் சென்ற அந்த வெட்டுக் கத்தி, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது மாணவனின் கழுத்தைப் பதம் பார்த்தது.

இரு மோட்டார் சைக்கிள்களும் அருகருகே சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்து, மாணவர் சுருண்டு விழுந்து அங்கேயே மரணமடைந்தார்.

அவருடன் பயணித்த நண்பருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து, முறையே 39, 52 வயதிலான 2 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

வெட்டுக் கத்தி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

நோக்கமில்லா கொலையாக வகைப்படுத்தப்பட்டு, இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!