Latestமலேசியா

நகர தெருவில் இரண்டு வரிசையாக நிறுத்தப்பட்ட கார்களால் ரெப்பிட் கே.எல் பேருந்து செல்ல முட்டுக்கட்டை

கோலாலம்பூர், மார்ச் 10-சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளியில், நகரத் தெருவில் இரட்டை வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக அந்த இடத்திலிருந்து ரெப்பிட் கே.எல் பேருந்து கடந்து செல்ல முடியாமல் இருப்பதைக் காணமுடிந்தது.

Roadblock Seluruh Malaysia வெளியிட்ட இந்த காணொலியில், பேருந்து சாலையின் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

எந்த மோதலும் ஏற்படவில்லை என்றாலும், பேருந்து மிகவும் இறுக்கமான இடைவெளி வழியாக நகர்ந்ததால் அருகிலுள்ள வாகனங்களில் மோதும் அபாயத்தை ஏற்படுத்தியது.

இரட்டை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற டொயோட்டா வியோஸின் உரிமையாளர் என்று நம்பப்படும் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர், பேருந்து , ஓட்டுநரை சிறிது பின்னோக்கிச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

வைரலான இந்த காணொளி குறித்து இணையவாசிகள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டதோடு பேருந்து ஓட்டுனருக்காக தங்களது அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

இடையூறு விளைவிக்கும் வாகனங்களை இழுத்துச் செல்ல வேண்டும் என்று வலைத்தளவாசி ஒருவர் பரிந்துரைத்தார்.

நெரிசலான நகர வீதிகளில் செல்லும்போது பொது போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!