Latestமலேசியா

வீட்டில் கார்களுக்குத் தீ வைப்பு; செக்கு சந்திரா குடும்பத்தாரின் பயங்கர தருணங்கள்

செர்டாங், மார்ச்-10-“நானும் குழந்தைகளும் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தோம்; அப்போது திடீரென வீட்டுக்கு வெளியே கார்கள் தீப்பற்றி எரிந்தன; பயத்தில் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டோம்”

சிலாங்கூர், தாமான் கின்றாராவில் உள்ள தங்களது வீட்டில் நேற்றிரவு 3 கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து, சமூக ஆர்வலர் Cikgu Chandra-வின் மனைவி விவரித்த வார்த்தைகள் அவை…

குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர அஞ்சினர். அப்போது அண்டை வீட்டார் தான் விரைந்து வந்து தீயை அணைக்க உதவியதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அவர் சொன்னார்.

கணவருக்கு ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், இந்த சதிநாச வேலை நடந்துள்ளது.

இதனால் SPM தேர்வெழுதவுள்ள பிள்ளைகளில் ஒருவர் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தீ வைக்கப்பட்ட 3 கார்களில் Proton Ertiga முற்றாக அழிந்துபோயிருப்பதை Cikgu Chandra உறுதிப்படுத்தினார்.

Perodua Viva, Perodua Bezza ஆகிய மற்ற 2 கார்கள் சேதமடைந்துள்ளன.

கருப்பு முகமூடி அணிந்து, கையில் பாராங் கத்தி ஏந்திய சுமார் 6 பேர் வீட்டு வளாகத்திற்கு வந்தது CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இச்சம்பவத்தை அடுத்து, வீட்டு வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் Cikgu Chandra கூறினார்.

சதிநாச வேலையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுமாறும் போலீஸாரை அவர் கேட்டுக் கொண்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!