
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார்.
பிப்ரவரி 9-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், தமக்கு உணவுப் பரிமாறிய அப்பெண்ணிடம் அவர் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது.
அவ்வாடவரை எச்சரித்து விட்டு அங்கிருந்து அப்பெண் நகர, விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான நிலைய போலீஸார் அந்நபரைக் கைதுச் செய்தனர்.
சிங்கப்பூர் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
வேலையிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு சிங்கப்பூர் கடுமையான சட்டங்களை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.



