
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில், பட்டப் பகலில் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டு வைரலான ஆடவரும் மாதுவும் கைதாகி, விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
50 வயதிலான அவ்வாடவரும், 30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணும் ஜோர்ஜ்டவுனில் நேற்றிரவு கைதானதாக, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் கூறினார்.
இருவரும் கணவன் மனைவி அல்ல என்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது, பெண்ணின் மரியாதைக்கு பங்கம் விளைவித்தது ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக அசிசீ சொன்னார்.
நிர்வாணக் கோலத்தில் அவ்வாடவரும், அரை நிர்வாணமாக அப்பெண்ணும் சீனக் கல்லறையில் கொஞ்சமும் கூச்சமின்றி ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட 38 வினாடி வீடியோ முன்னதாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அச்சம்பவத்தை நேரில் கண்ட மாது ஒருவர் அவ்விருவரையும் கடிந்துகொண்டே அந்த வீடியோவைப் பதிவுச் செய்திருந்தார்.
விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததும், சம்பந்தப்பட்ட சீன கல்லறையின் நிர்வாகமும் போலீஸில் புகார் செய்ததாக அறியப்படுகிறது.



