
லிவர்பூல், மார்ச்-25-லிவர்பூலின் நட்சத்திர வீரர் மோ சாலா எனப்படும் மொஹமட் சாலா, இப்பருவ இறுதியில் அவ்வணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு அணியில் இணைந்த அவர், இத்தனை ஆண்டுகளாக லிவர்பூலின் கோல் மன்னனாக வலம் வந்தார்.
இக்காலக் கட்டத்தில், லிவர்பூல் பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட பல முக்கிய கிண்ணங்களை வென்று குவிக்க, சாலா முக்கியக் காரணமாக விளங்கினார்.
லிவர்பூல் இரசிகர்கள் மட்டுமின்றி, அணி கடந்து எல்லா இரசிகர்களாலும் இவர் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஓரிரண்டு பருவங்களாகவே இவருக்கும் லிவர்பூல் நிர்வாகத்துக்கும் இடையே அதிருப்தி நிலவியதாகக் கூறப்படு வந்தது.
இந்நிலையில், அவரின் 9 ஆண்டு கால பங்களிப்பு Anfield-டில் முடிவுக்கு வருவது இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுநாள் வரை தமக்கு வற்றாத ஆதரவை வழங்கிய லிவர்பூல் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சாலா, லிவர்பூலில் கழித்த காலம் தனது வாழ்க்கையின் சிறந்த அனுபவம் என வருணித்தார்.
சாலா வெளியேறுவது, லிவர்பூல் அணிக்கு ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக அவர் எந்த அணியில் சேரப்போகிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.



