Latestஉலகம்

யுக்ரேய்னில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு

லிவிவ், மார்ச்-25-யுக்ரேய்னில் பகல் நேரத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் சுமார் 1000 ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக யுக்ரேய்ன் ஆகாயப்படை தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மின்சார வசதிகள் சேதமடைந்தன.

லிவிவ் நகரில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தளமான 17-ஆம் நூற்றாண்டு Saint Andrew தேவாலயத்தோடு Bernardine மடாலயமும் அத்தாக்குதலில் பாதிக்கப்பட்டது.

இதில் குறைந்தது 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் Moldova நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் கொடூரத்தின் மொத்த உருவம் என யுக்ரேய்ன் அதிபர் வொளாடிமிர் செலன்ஸ்கி கண்டித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!