Latestமலேசியா

பூனைக் குட்டியை துன்புறுத்தும் காணெளி வைரல் -நடவடிக்கை தேவையென நெட்டிசன்கள் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச்- 26- ஒரு முதியவர் பூனைக்குட்டியை அடிக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அந்நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையத்தளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்னால், அந்த முதியவர் உலோகம் போன்ற ஒரு பொருளால் பூனைக்குட்டியை அடித்து, அது தரையில் அசைவற்று விழும் வரை துன்புறுத்துவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை ஒரு ‘எக்ஸ்’ பயனர் பதிவேற்றியுள்ளார்.

வயதாகிவிட்டதால் இறுதி காலத்தில் இன்னும் தொல்லை கொடுப்பவராக இருக்கீறிர்கள் . உங்களுக்குப் பூனைகளைப் பிடிக்கவில்லை என்றாலும், அதற்காக அவற்றைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நெட்டிசன் ஒருவர் தனது x தளத்தில் பதிவிட்டார்.

அந்த மூன்று பூனைக்குட்டிகளும் தன் வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோதிலும் சம்பந்தப்பட்டவரின் வீட்டுப் பகுதிக்குள் அவை காலடி கூட எடுத்து வைக்கவில்லை என்று அந்த இணையவாசி X பதிவில் பதிவேற்றம் செய்திருந்தார்.

150,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற, அந்த மூன்று நிமிட காணொளியில் , சோர்ந்துபோன பூனைக்குட்டியைப் பார்த்த பிறகு அந்த நபர் பின்வாங்குவது காட்டப்பட்டது.

பின்னர் அவர் திரும்பி வந்து, ஆடையை மாட்டும் உலோக கொக்கியால் அந்த வளர்ப்புப் பிராணியை குத்தினார்.

அந்த பூனைக்குட்டி பின்னர் சுயநினைவு பெற்றபோதிலும் அந்த வீடியோவைப் பதியவிட்ட நபர் அது இறந்துவிட்டதாகக் கூறி, குப்பை அள்ளும் தட்டில் கிடக்கும் அந்த விலங்கின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

மற்ற இணையவாசிகள், அந்த வீடியோவில் உள்ள நபரைக் கடுமையாகச் சாடி, இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!