Latestமலேசியா

புதிதாக பிறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், மார்ச் 26-அம்பாங்கிற்கு அருகிலுள்ள தாமான் புத்ராவில் ஒரு வீட்டின் முன்புறமுள்ள குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

மாலை மணி 6.27 க்கு ஆடவர் ஒருவரிடமிருந்து தமது துறைக்குத் இது குறித்த தகவல் கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கைருல் அனுவார் காலித் ( Khairul Anuar Khalid ) கூறினார்.

அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி இன்னும் இருந்ததால் அது கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

போலீஸ் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே புகார்தாரரின் வீட்டின் முன்புறமுள்ள குப்பைத் தொட்டியில் அந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இக்குழந்தை தற்போது சீரான நிலையில் இருப்பதோடு சிகிச்சை மற்றும் கூடுதல் கண்காணிப்பிற்காக அம்பாங் மருத்துவமனையில் இருந்து வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கைருல் அனுவார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குற்றவியல் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!