Latestமலேசியா

அண்டை வீட்டுக்காரருக்கு காயம் விளைவித்த இளைஞர் கைது

கோலாலம்பூர், மார்ச் 30- அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தனது வீட்டிற்கு முன் கார்
நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் அவரை கட்டை மற்றும் கற்களினால் தாக்கி காயம் விளைவித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

செராஸ் தாமான் மிடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக 60 வயதுடைய நபர் புகார் செய்ததைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் Jalan Peel லில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தலைவர் உதவி கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.

தன்னை தாக்குவதற்கு முன் அந்த இளைஞர் கொச்சை வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார்தாரர் தெரிவித்தார்.

இதனிடையே போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபருக்கு இதற்கு முன் இரண்டு குற்றச்செயல் பின்னணி இருப்பதாகவும் தெரியவந்தது.

இரண்டு நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் அந்த இளைஞர் போலீஸ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக முகமட் ரோஸ்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!