
கோலாலம்பூர், ஜூலை.02-Smart Lane எனும் போக்குவரத்து நிர்வாகத் திட்டம் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை 50 விழுக்காடு குறைக்க உதவியிருக்கிறது. 2023 முதல் தற்போது வரை மலேசிய நெடுஞ்சாலை வாரியம் LLM மேற்கொண்ட கண்காணிப்பில் குறிப்பாக PLUS நெடுஞ்சாலையின் பரபரப்பான பகுதிகளில் போக்குவரத்தைச் சீராக்குவதில் இத்திட்டம் நல்ல பலனைக் கொண்டு வந்திருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, Smart Lane பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன. அதோடு மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய விபத்துகளும் குறைந்திருப்பதாக அவர் இன்று மக்களவையில் விளக்கினார்.
அண்மைய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் வார நாட்களில் 12 Smart Lane இடங்களில் மொத்தம் 36 விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பெரும்பாலான விபத்துகளில், கீறல்கள் அல்லது சிறிய அளவிலான வாகனச் சேதம் போன்ற சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. இவ்விபத்துகளுக்கு முக்கியக் காரணம் சாலைப் பயனர்களின் போக்குதான் காரணம் என்பது கண்றியப்பட்டுள்ளது.
இவ்வேளையில், போக்குவரத்து நெரிசலை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) திறனுடைய CCTV பயன்பாட்டை விரிவுபடுத்த LLM முக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.



