Latestமலேசியா

தாய்லாந்தில் போக்குவரத்து விதியை மீறும் மலேசியர்களுக்கு ஏப்ரல் முதல் கடுமையான அபராதம், சிறை தண்டனை

நரதிவாட் , மார்ச் 30 -தாய்லாந்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் சைக்கிளேட்டிகள் உட்பட மலேசிய வாகன ஓட்டுநர்கள் அடுத்த மாதம் முதல் கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.

இதில் 2,385. ரிங்கிட் அல்லது (20,000 பாட்) வரை அபராதம் மற்றும் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை ஆகியவை அடங்கும். இந்த கடுமையான அமலாக்கமானது, அனைத்து ஓட்டுநர்களிடமும் சாலை கட்டொழுங்கை மேம்படுத்துவதையும், விபத்துக்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நரதிவாட்டிலுள்ள போக்குவரத்து போலீஸ்துறை தெரிவித்தது.

குற்றங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறிச் செல்லுதல், பாதசாரிகள் கடக்கும் இடங்களில் நிற்கத் தவறுதல், கை தொலைபேசிகளை பயன்படுத்துதல், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டுதல், மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் இருத்தல் ஆகியவை அடங்கும்.

மேலும் இருக்கைகளுக்கான பாதுகாப்புப் பெல்ட் அணியத் தவறுதல், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காமல் இருப்பது, மது போதையில் வாகனம் ஓட்டுதல், மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் ஆகியவை பிற மீறல்களில் அடங்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதத்தைச் செலுத்தத் தவறும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள், எதிர்காலத்தில் தாய்லாந்திற்குள் நுழைவதிலிருந்து தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களும் நியமிக்கப்பட்ட போக்குவரத்து போலீஸ் அலுவலகங்களில் செலுத்தப்படும் வரை, ஓட்டுநர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!