
ஜெய்ப்பூர், ஏப்ரல்-1-ஜெய்ப்பூர் ‘pink யானை’ புகைப்படம் நேற்று முதல் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சஞ்சல் என்ற அந்த யானை, 65 வயதில் கடந்த பிப்ரவரி மாதமே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
வைரலாகிய அந்த புகைப்படமோ கடந்தாண்டு நவம்பரில் எடுக்கப்பட்டதாம். ரஷ்ய புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா (Julia Buruleva), சஞ்சலை ‘pink’ நிறத்தில் பூசி கலை முயற்சியாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், சஞ்சலின் உயிரிழப்புக்கும் அந்த புகைப்படப் பிடிப்புக்கும், எந்த சம்பந்தமும் இல்லையென, சஞ்சலின் உரிமையாளர் Sadik Khan உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஹோலி பண்டிகை மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும், மூலிகை அடிப்படையிலான ‘gulal’ என்ற பாதுகாப்பான நிறமே யானையின் உடலில் பூசப்பட்டது; 10 நிமிடங்களில் படப்பிடிப்பு முடிந்தது, உடனடியாக நிறம் கழுவப்பட்டும் விட்டது” என அவர் தெளிவுப்படுத்தினார்.
உள்ளூர் அதிகாரிகளும், யானை இறப்புக்கும் புகைப்படப் பிடிப்புக்கும் தொடர்பில்லை என்றும், வயது முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறாலேயே சஞ்சல் இறந்திருப்பதாகவும் நம்புகின்றனர்.
இதனிடையேத், இந்த ‘pink யானையின்’ புகைப்படம் மீண்டும் வைரலான நேரத்தில், அதன் இறப்பு செய்தியும் வந்ததால், விலங்கு நலன் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது
எது எப்படி இருந்தாலும், யானையின் மீது இப்படி சாயம் பூசுவது, விலங்கு நெறிமுறைக்கு எதிரானது என விலங்கின ஆர்வலர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர்…



