
பெந்தோங், ஏப்-1-தாமான் ஓர்கிட் பகுதியில், திங்கட்கிழமை முதல் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் ஆறு பேர் கொண்ட குடும்பம் காணாமல் போனதை அடுத்து, அவர்களைக் போலீசார் தேடி வருகின்றனர்.
மார்ச் 30 ஆம்தேதி இரவு மணி 7.34 க்கு இந்தச் சம்பவம் குறித்துத் தனது துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் பெந்தோங் (Bentong) மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஸைஹாம் முகமட் கஹார் (Zaiham Mohd Kahar ) தெரிவித்தார்.
41 வயது தனது மனைவி M.Rekha மற்றும் ஐந்து பிள்ளைகள் காலை சுமார் 6.30 மணியளவில் வீட்டில் இல்லை என்று 43 வயது ஆடவரான புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
19 வயதுடைய Ruban , 17 வயதுடைய Sharivina Nair , 16 வயதுடைய Shasini Nair, 14 வயதுடைய Pritivi Nair மற்றும் 4 வயதுடைய Lashwin Nair ஆகியோர் அந்த தம்பதியரின் ஐந்து பிள்ளைகளாவர்.
அந்த அறுவரையும் தேடும் மற்றும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியையும் விசாரணையும் போலீஸ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பெந்தோங் போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படி Zaiham கேட்டுக்கொண்டார்.



