
ஜகார்த்தா, ஏப்ரல்-2 – இந்தோனேசியாவின் வட மலுக்குவில் (Maluku Utara) இன்று அதிகாலை ரிக்டர் அளவைக் கருவியில் 7.4 அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை சுமார் 6.50 மணிக்கு Ternate நகரத்திற்கு அருகிலுள்ள மலுக்கு கடலில் நில நடுக்கம் மையமிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நிலப்பகுதிக்கு அருகில் அது ஏற்பட்டதால் அதிர்வு பல பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது.
தொடக்கக் கட்ட தகவலின் படி, குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார்; பலர் காயமடைந்துள்ளனர்.
வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வட சுலாவேசி பகுதியில் சிறிய அலைகள் பதிவாகின.
ஆனால் பின்னர் ஆபத்து இல்லை என்று உறுதிச் செய்யப்பட்டதால் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
Manado, Bitung உள்ளிட்ட நகரங்களிலும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பதற்றத்தில் வெளியேறினர்.
சேதங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வரும் நிலையில், அவசர உதவிக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



