
தெஹ்ரான், 8 ஏப்ரல்,-ஈரானுக்கு எதிரான அனைத்து இராணுவ தாக்குதல்களும் நிறுத்தப்பட்டால், Hormuz நீரிணையில் 2 வாரங்களுக்கு பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிச் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் Ali Bagheri Araghchi அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
“இந்த நிபந்தனை நிறைவேறினால், ஈரானிய இராணுவமும் அதன் தற்காப்புக்கான தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தும்” என்றார் அவர்.
என்றாலும், இந்த இரண்டு வார காலத்தில் Hormuz நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் ஈரான் இராணுவத்துடன் ஒருங்கிணைந்த முறையில் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்; அதோடு, தொழில்நுட்ப கட்டுப்பாடுகளும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
இப்போதைக்குத் தற்காலிகமானது என்றாலும், உலகின் முக்கிய எண்ணெய் கடல் வழியாகக் கருதப்படும் இந்த Hormuz நீரிணைத் திறக்கப்படுவது, அனைத்துலகக் கடல் பாதுகாப்புக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



