Latestமலேசியா

“Go For It! Cross Country 2026” குறுக்கோட்டப் போட்டி மீண்டும் வருகிறது; ஜூலை 5-ஆம் தேதி கோலாலம்பூரில்…

கோலாலம்பூர், ஏப்ரல்-10,”Go For It! Cross Country 2026″ குறுக்கோட்டப் போட்டி இவ்வாண்டு மீண்டும் நடைபெறவுள்ளது.

STM Lottery நிறுவனம், கூட்டரசு பிரதேச ஓட்டப்பந்தய சங்கத்துடன் இணைந்து நடத்தும் இப்போட்டி, ஜூலை 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர், Padang Merbok-கில் நடைபெறும்.

இவ்வாண்டு மொத்தம் 13 போட்டி பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 15 கிலோ மீட்டர் சாலை ஓட்டம், 10 மற்றும் 7 கிலோ மீட்டர் குறுக்கோட்டம், மேலும் 5 மற்றும் 3 கிலோ மீட்டர் fun run போன்றவை அடங்கும்.

இவை அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டரசு பிரதேச ஓட்டப்பந்தய சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr புலேந்திரன் தெரிவித்தார்.

போட்டிகள் காலை 6 மணி முதல் தொடங்கும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் நேர வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Early bird அதாவது முன்கூட்டிய பதிவு ஏப்ரல் 11 முதல் மே 10 வரை நடைபெறும்.

பதிவு கட்டணம் RM35 முதல் தொடங்குகிறது.

வழக்கமான பதிவு ஜூன் 21 அன்று முடிவடைகிறது.

மேலும், போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குலுக்குச் சீட்டு பரிசுகள், நினைவுப் பொருட்கள் மற்றும் சுற்றுலா பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், சமூக ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதாக புலேந்திரன் சொன்னார்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களை நாடலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!