Latestமலேசியா

RM700,000 மேலான கஞ்சா பறிமுதல்; தப்பியோட முயன்ற ஆடவன் கைது

பாசிர் மாஸ், ஏப் 14 – பாசீர் மாஸ் , Kampung kubang Puyu Meranti யில், சந்தேக நபரை கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பொது நடவடிக்கைப் படை குழுவினர் ஆடவன் ஒருவனை கைது செய்து 700,000-ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள 210 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் .

நேற்றிரவு மணி 8.30க்கு பொது நடவடிக்கைப் பிரிவிவின் உறுப்பினர்கள் குழு ஒன்று மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தென் கிழக்கு பொது நடவடிக்கைப் படை பிரிவின் கமாண்டர் மூத்த உதவி கமிஷனர் அகமட் ராட்ஷி உசேய்ன் தெரிவித்தார்.

ரோந்துப் பணியின்போது, ​​தனது குழுவினர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த ஒரு புரோட்டான் சாகா காரைக் கண்டதாகவும் அக்காரை நிறுத்த முயன்றபோது சந்தேக நபர் மிக வேகமாகச் சென்றதால், அவரை 10 கிலோமீட்டர் தூரம் துரத்திய பிறகு கைது செய்தோம் என அவர் கூறினார்.

35 வயதுடைய சந்தேக நபர் ஓட்டி வந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, ​​கஞ்சா என நம்பப்படும் 210 கிலோகிராம் உலர்ந்த செடிகள் அடங்கிய பல பழுப்பு நிறப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39 பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமட் ராட்ஷி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!