Latestமலேசியா

கென்யாவிலிருந்து 2,200 எறும்புகள் கடத்த முயன்ற – சீன பிரஜைக்கு 7,746 டாலர் அபராதம் 12 மாதம் சிறை

நைரோபி, ஏப் 16 -உயிருள்ள எறும்புகளை நாட்டிலிருந்து கடத்த முயன்றதற்காக, ஒரு சீன நாட்டவரான ஜாங் கெகுன் ( Zhang kequn) என்பவருக்கு 10 லட்சம் ஷில்லிங் (Shilling ) அதாவது (7,746 டாலர்) அபராதமும், 12 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு கென்யாவிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

Zhang Kequn , கடந்த மாதம் நைரோபியின் அனைத்துலக விமான நிலையத்தில் தனது பயணப் பையில் 2,200-க்கும் மேற்பட்ட உயிருள்ள தோட்ட எறும்புகளுடன் கைது செய்யப்பட்டார்.

கென்யாவில் எறும்பு கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதால், ஒரு தடுப்பாக கடுமையான தண்டனை தேவை என்று இந்த வழக்கின் மாஜிஸ்திரேட் கூறினார்.

Zhang கிற்கு எறும்புகளை வழங்கியதாகக் கென்யாவைச் சேர்ந்த சார்லஸ் மாவாங்கி ( Charles Mwangi ) மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது .

மவாங்கி தனது குற்றத்தை மறுத்து, ஜாமினில் உள்ளார். கடந்த ஆண்டு, ஆயிரக்கணக்கான எறும்புகளைக் கடத்த முயன்றதற்காக கென்யாவில் நான்கு பேருக்கு தலா 1 மில்லியன் ஷில்லிங் அபராதம் விதிக்கப்பட்டது.

யானைத் தந்தம் போன்ற மதிப்புமிக்க பொருட்களிலிருந்து, அதிகம் அறியப்படாத உயிரினங்களை நோக்கி திருட்டு மாறி வருவதை இந்த வழக்கு உணர்த்துகிறது என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!