
புத்ராஜெயா, ஏப்ரல்-17-கூட்டரசு நிலங்களின் அந்தஸ்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azri Abu Bakar அனைத்து அமைச்சுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நடவடிக்கை, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசு நிலங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில அரசு நிலங்கள் பராமரிப்பு இல்லாமல் விட்டுச் செல்லப்பட்டதால், அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறும் அபாயமிருப்பதாக அவர் சொன்னார்.
எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சுகள், நில விவரங்களை புதுப்பித்து, அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இம்முயற்சி, அரசாங்கத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவும் உதவும் என்றார் அவர்.



