Latestமலேசியா

வட மாநிலங்களில் RON95, டீசல் விநியோகத்தில் தற்காலிகத் தட்டுப்பாடு – Caltex அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-19-வட மாநிலங்களில் உள்ள சில Caltex சேவை நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிகத் தடங்கல் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17 தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சில சேவை நிலையங்களில் RON95 பெட்ரோலும் டீசலும் சில நாட்களுக்கு குறைவாக இருக்கும் என Caltex Malaysia உறுதிப்படுத்தியது.

துறைமுகங்களில் ஏற்பட்ட எதிர்பாராத தாமதங்களே இந்த விநியோக பிரச்சனைக்குக் காரணம் என அந்நிறுவனம் கூறியது.

இதனால் எரிபொருள் அனுப்பும் அட்டவணை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைச் சமாளிக்க விநியோகத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் Caltex தெரிவித்துள்ளது.

ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய Caltex, பொது மக்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!