
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசிய சீக்கியச் சமூகத்தை அங்கீகரிக்கும் வகையில் மடானி அரசாங்கம் தொடக்க உதவியாக RM500,000 நிதியை அறிவித்துள்ளது.
இந்த நிதி சீக்கியச் சமூக நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள் மற்றும் சமூக முன்னேற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இந்நிதியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றார் அவர்.
மலேசியாவின் பன்முக சமூக அமைப்பே நாட்டின் வலிமை எனவும், அனைத்து சமூகங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கோலாலம்பூரில் உள்ள மலேசிய சுற்றுலா மையமான Matic-கில் நேற்று நடைபெற்ற ‘2026 வைசாக்கி விழாவில்’ பங்கேற்று உரையாற்றிய போது அன்வார் அதனை அறிவித்தார்.
கோபிந்த் உட்பட சீக்கியச் சமூகத் தலைவர்களும் மக்களும் அதில் திரளாகக் கலந்துகொண்டனர்.



