Latestமலேசியா

ஜாலான் துன் ரசாக்கில் சுற்றுலா வேனில் லோரி மோதியதில் எண்மர் காயம்

கோலாலம்பூர் , ஏப் 20 – கோலாலம்பூரில், ஜாலான் துன் ரசாக்கில் தேசிய நூலகத்திற்கு எதிரே ஒரு சுற்றுலா வேன் மீது லோரி மோதியதில் அந்த வேனில் இருந்தவர்களில் எண்மர் காயம் அடைந்தனர்.

நேற்று மாலை மணி 4 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

தித்திவாங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐவர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்விபத்தில் 56 வயதான லோரி ஓட்டுநருக்கு கண்ணிலும், அவருடன் பயணித்த 46 வயது ஆடவருக்கு காலிலும் காயம் ஏற்பட்ட நிலையில்
ஓட்டுநர் உட்பட, 15 பேர் பயணித்த வேனில் இருந்தவர்களில் ஆறு பேர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர். மற்ற ஒன்பது பேருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

காயமடைந்த அனைவருக்கும் சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் பணியாளர்களால் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!