
டுங்குன், ஏப்ரல்-26-திரங்கானு, டுங்குன் அருகே 4 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்தது உட்பட மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
Jalan Jerangau-Jabor சாலையின் 80-ஆவது கிலோ மீட்டரில், Felda Kerteh சாலைச் சந்திப்புக்கு அருகில் நேற்றிரவு இவ்விபத்து நிகழ்ந்தது.
இதில் Proton Persona, Perodua Myvi, Honda Civicமற்றும் Toyota Hilux ஆகிய 4 வாகனங்கள் மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன, சில பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த Paka தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக டுங்குன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



