
ஆராவ், ஏப் 28- பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவின்றி ஏப்ரல் 15 ஆம்தேதி கண்டுப்பிடிக்கப்பட்ட 8 மாத குழந்தை ஏழு நாட்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பின் இறந்தது.
Aufa Zayyana Mohamad Zaerwafar என்ற அந்த குழந்தை நல்ல ஆரோக்கியதுடனும் மகழ்ச்சியுடனும் இருந்த நிலையில் ஏப்ரல் 15ஆம்தேதி காலையில் அதன் தாயார் சிறார் பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
எனினும் அன்றைய தினம் மாலை மணி 5.20 அளவில் குழந்தை சுயநினைவின்றி இருப்பதாக அதன் தாயார் ஐஸ்யாவாத்தி இசாவுக்கு தொலைபேசி மூலம் பராமரிப்பாளரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக அக்குழந்தையை கங்கார் துவாங்கு பவ்சியா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
அக்குழந்தையின் தலையில் இரத்தம் உறைந்திருப்பதாக கூறப்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அலோஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.
கவலைக்கிடமான நிலையில் ஏழு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அக்குழந்தை ஏப்ரல் 22 ஆம்தேதி மாலை மணி 3.08க்கு உயிரிழந்தது.
இதனிடையே விசாரணைக்கு உதவும் பொருட்டு முக்கியமான ஆதாரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இறந்த குழந்தையின் தந்தை Mohamad Zaerwafar கூறினார்.
அக்குழந்தையின் மரணம் தொடர்பான புகார் கிடைக்கப் பெற்றதை ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Mohsin உறுதிப்படுத்தியதோடு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



