
சிரம்பான், ஏப்ரல்-28-நெகிரி செம்பிலான் திவி ஜெயா விளையாட்டு கிளப்பின் 35-ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம், ஏப்ரல் 26-ஆம் தேதி கோலாகலமாகவும் குடும்ப குடும்ப உணர்வுடனும் நடைபெற்றது.
சிரம்பான், ரோயல் சுங்கை ஊஜோங் கிளப்பில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
1993 முதல் நெகிரி செம்பிலான் கால்பந்து சங்கத்தின் இணை உறுப்பினராக விளங்கும் இந்த கிளப், பல திறமையான கால்பந்து வீரர்களை மாநில ரீதிக்குக் கொண்டு வந்துள்ளது.
விழாவில் பேசிய முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ வி.எஸ் மோகன், ஆரம்பக்கால கால்பந்து மேம்பாட்டுக்கு இந்த கிளப்பின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
நெகிரி செம்பிலான் கால்பந்து சங்கத்தின் செயலாளர் Zamsari Mohamad, கிளப்பின் தலைவர் காளிதாஸ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
கிளப்பின் ஆலோசகரும், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ தினாளன் பேசுகையில், கால்பந்து மேம்பாட்டுக்குத் திவி ஜெயா வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.
மேலும், இதுபோன்ற விளையாட்டு மன்றங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ம.இ.கா எப்போதும் திவி ஜெயா போன்ற கிளப்புகளுக்குத் தனது ஆதரவை வழங்கும் என்றும், வருங்கால தலைமுறையினருக்கு இது போன்ற மன்றங்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பைக் கொடுக்கும் என்றும் தினாளன் உறுதியளித்தார்.



