
கோலாலாம்பூர், ஜூலை-27-முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்கப்பட்ட தமிழ் திரைப் படமான ‘சொடுக்கு’ (SODAKU) திரைப்படத்தின் இசை மற்றும் டிரேய்லர் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குனர் காமராஜ் இயக்கத்தில், சுமார் 3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பொருட்செலவில், 40 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ஒரு விறுவிறுப்பான மர்மக் கதைக் களத்தைக் கொண்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், இந்தியத் திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களான லிங்குசாமி, சரண், மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நட்டி (நட்ராஜ்), விதார்த், ரஷிதா மகாலட்சுமி மற்றும் கயல் ஆனந்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இதுபோன்ற முயற்சிகளுக்கு இரசிகர்கள் ஊக்கமளிக்க வேண்டுமென்றும், மலேசியாவைப் படப்பிடிப்புக்கான தளமான தேர்வுச் செய்த தயாரிபப்புக் குழுவுக்கு சரவணன் நன்றியும் தெரிவித்தார்.
*SPEECH*
படத்தின் இணைய் தயாரிப்பாளரான டத்தோ கணேசன், படம் உருவான கதை உள்ளிட்டவை குறித்து வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டார்.
*INTERVIEW*
படத்தின் நாயக நடிகர் -நடிகர்களும் பட அனுபவத்தை விவரித்தனர்.
*INTERVIEW*
வரும் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் தொடக்கத்திலோ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், மலேசியத் திரைப்படங்களுக்கு இரசிகர்கள் எப்போதும் ஆதரவு தர வேண்டும் என இந்நிகழ்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.



