Latest

நேர நெருக்கடி: பிரதமர் அன்வார் – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்புத் இரத்து; ரமணண் விளக்கம்

புது டெல்லி, செப்டம்பர்-12- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இடையிலான சந்திப்பு, நேர நெருக்கடி காரணமாகவே நடைபெறவில்லை என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தியத் தலைநகர்
புது டெல்லியில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய ரமணன், பல்வேறு யூகங்களை மறுத்தார்.

உண்மையில் இரு தரப்பின் கால அட்டவணையும் ஒத்துப்போகாததே இதற்கு காரணம் என்றும், உயர் மட்ட அரசத் தந்திரப் பயணங்களில் இத்தகைய அட்டவணை மாற்றங்கள் சாதாரணமானவை என்றும் அவர் கூறினார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்காக டெல்லி சென்ற
​பிரதமர் அன்வார் அடுத்து கேரளம் செல்கிறார்.

தொடர்ந்து, செப்டம்பர் 14 முதல் 15 வரை மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பின்னர் மலேசிய தின கொண்டாட்டத்திற்காக அவர் நாடு திரும்புவார்.

எனவே, இந்த விஷயத்தை சரியான கோணத்தில் அணுகுமாறும், அட்டவணை சிக்கலைத் தவிர வேறு எந்தக் காரணமும் இதில் இல்லை என்றும் அமைச்சர் ரமணன் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் அன்வார்-விஜய் சந்திப்பு முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டதால் அது நடைபெறவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!