
கோலாலம்பூர், மே-3-சமூக ஊடகங்களின் முன்னோடியான Friendster, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களம் இறங்குகிறது.
அதுவும் இன்றைய ‘algorithm’ உலகிற்கு சவால் விடும் வகையில் இதன் மறுபிரவேசம் அமைகிறது.
இன்று நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில், நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதை ஒரு இயந்திரம் தான் முடிவுச் செய்கிறது.
ஆனால், இந்த Frinedster 2.0 செயலி, ‘algorithm இல்லாத உலகத்தை’ நமக்குத் தருகிறது.
ஆம்! உங்களின் timeline-னில் விளம்பரங்களோ அல்லது தேவையற்ற பரிந்துரைகளோ இருக்காது.
தற்போது iOS தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்தச் செயலி, உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் பின்தொடராத நபர்களின் கணக்குகளை உங்களுக்குப் பரிந்துரைக்காது.
உங்களின் நிஜ நண்பர்கள் என்ன பகிர்கிறார்களோ, அது மட்டுமே உங்கள் திரையில் தோன்றும்.
“டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, நிஜமான மனிதத் தொடர்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம்” என, இதன் புதிய உரிமையாளரும் தொழில்முனைவோருமான Mike Carson கூறுகிறார்.
தவிர, முன்பு போல உங்கள் profile சுயவிவரங்களை நீங்களே அழகுபடுத்தலாம், பாடல்களைச் சேர்க்கலாம்.
போலித்தனம் இல்லாத, நேர்மையான ஒரு சமூக வலைத்தள அனுபவத்தை, அதுவும் ‘2K kids’ தலைமுறையும் கொண்டாடக் கூடிய வகையில் மீண்டும் கொண்டு வருவதே Friendster-ரின் இலக்காம்…



