Latestஇந்தியாஉலகம்

மணமகனின் கரம் பற்றும் தருவாயில் பிரிந்த 22 மணமகளின் உயிர்; இந்தியா ராம்நகரில் துயரம்

ராம்நகர், மே 7 – மணமகனின் கைப்பற்றும் தருணம் திருமண மேடையில் மாரடைப்பு வந்து மணப்பெண் இறந்த சம்பவம் அவ்வட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியா ராம்நகரில்
கடந்த மே 3-ஆம் திகதி நிகழ்ந்தது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்த அவர்களின் திருமணத்தில் மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் சமயம் 22 வயதான மணப்பெண், ஆயிஷா டேபர்மா மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என மருத்துவர் கூறியுள்ளனர்.

இதனிடையே, கல்யாண வீடு இறப்பு வீடாக மாறி குடும்பத்தார் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், ஆயிஷாவின் இறுதி சடங்கில் கலந்துக் கொள்ளும் சூழல் அவ்வட்டார மக்கள் அனைவரையும் கலங்க வைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!