
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2024-ஆம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான மச்சி தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு, லஞ்சம் அல்லது முறைகேடான சலுகை பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் MACC சட்டத்தின் கீழ் இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகள் விரிவான விசாரணை நடத்தப்பட்ட பின்னர், சேவியருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என துணை அரசு வழக்கறிஞர் முடிவு செய்ததாக MACC கூறியது.
2018 முதல் 2022 வரை நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சராகப் பதவி வகித்த சேவியர், 2021-ல் பிகேஆர் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவர் இந்த மாதம் மீண்டும் பிகேஆரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.



