Latestஉலகம்

Hantavirus குறித்து WHO எச்சரிக்கை: அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மற்றவர்களுக்குப் பரவும் அபாயம்

ஜெனிவா, மே-12-ஒருவருக்கு Hantavirus தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன், அதன் அறிகுறிகள் தென்படும் போதே அந்த நபரால் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமிருப்பதாக, உலக சுகாதார அமைப்பு WHO எச்சரித்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த MV Hondius என்ற சொகுசுக் கப்பலில் பரவிய இந்தத் தொற்று குறித்து புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குச் சோர்வு மற்றும் தசை வலி போன்ற ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தோன்றிய உடனேயே மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்பும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, Andes virus எனப்படும் ஒரு வகை Hantavirus கிருமி, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் பயணம் செய்த 3 பயணிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஏழுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்தத் தொற்று பொது மக்களிடையே பெரிய அளவில் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளதாக WHO கூறுகிறது.

ஆரம்பக்கட்டத்திலேயே தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவும் என்று மருத்துவ நிபுணர்களும் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!