Latestமலேசியா

ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது

ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

ச​னிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு கேளிக்கை மையத்திற்கு வெளியே, சிங்கப்பூரில் வேலை செய்யும் 27 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உடனிருந்த அவரின் நண்பர் மீதும் துப்பாக்கிச் சூடு பட்டு, காயமடைந்தார்.

இந்நிலையில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸ், ஒரு பெண் உட்பட 26 முதல் 29 வயதுக்குட்பட்ட மூவரைக் கைதுச் செய்தது.

கைதான போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் காணப்படவில்லை.

ஆனால், சோதனையில் அவ்விரு ஆண்களில் ஒருவருக்கு பழையக் கிரிமினல் குற்றப்பதிவு இருப்பது கண்டறியப்பட்டது.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அல்லது திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு இருக்கும் சாத்தியத்தை அவர்கள் மறுக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!