Latestமலேசியா

சபா செம்போர்னாவில் RM5.5 லட்சம் மதிப்புள்ள ஷியாபு பறிமுதல்; கடலில் குதித்து தப்பிய சந்தேகநபர்

செம்போர்னா, ஆகஸ்ட் 11 – சபா செம்போர்னா கம்போங் தெருசான் ஹுஜூங் புலாவ் பூம் பூம் (Semporna, Kampung Terusan Hujung, Pulau Bum Bum) அருகேயிருக்கும் கடற்பகுதியில், கடல்சார் காவல் படை (PPM) மேற்கொண்ட நடவடிக்கையில் 11.06 கிலோகிராம் ஷியாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 550,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.

நேற்று அதிகாலை 1.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வேகப் படகை போலீசார் அணுகியபோது, அதிலிருந்த ஆடவர் ஒருவர் கடலில் குதித்து தப்பினார். படகில் ஷியாபு என சந்தேகிக்கப்படும் 11 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைப்பொருள் மற்றும் படகு உட்பட மொத்த பறிமுதலின் மதிப்பு 578,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாகும். இச்சம்பவம் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!