
கோலாலம்பூர், நவம்பர் 13 – தேர்தல் காலங்களில் அரசியல் சூழல் தற்காலிகமாகச் சூடுபிடிப்பது இயல்பானது என்றும், தேர்தல் முடிந்ததும் நிலைமை சீராகும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போது நிலவும் அரசியல் பதற்றம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் வழக்கம்போல் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், அவரது ராஜினாமா கடிதத்தைப் பரிசீலிக்கத் தமக்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



