Latestமலேசியா

குளுவாங்கில் வாகனத்தில் பூனையைக் கட்டித் தொங்கவிட்ட நபருக்குப் போலீஸ் வலை வீச்சு

ஜோகூர், நவம்பர் 13 – குளுவாங் (Kluang), ஜாலான் மெர்சிங் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியே பூனையைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை சமூக ஊடகங்களில் பரவிய ஏழு விநாடிக் காணொளியைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தெரியவந்ததாக குளுவாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ (Bahrin Mohd Noh) தெரிவித்தார்.

பூனையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வாகனத்திற்கு வெளியே தொங்கவிட்டது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தகவல் தெரிந்தவர்கள் குளுவாங் மாவட்டக் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!