
கோத்தா கினாபாலு, மே-14-சபா, பெனாம்பாங்கில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை முறையான அனுமதியின்றி வளர்த்து வந்த 55 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸார் இணைந்து நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சோதனையின் போது, Murai Batu எனப்படும் வெள்ளை நிற வால் கொண்ட பறவைகள் உட்பட பல அரிய வகை பறவைகள் மீட்கப்பட்டன.
இப்பறவைகளை வளர்ப்பதற்கான எவ்வித ஆவணங்களோ அல்லது உரிமங்களோ அந்த நபரிடம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 30,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மீட்கப்பட்ட பறவைகள் வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.



