Latestமலேசியா

அசாம் பாக்கி விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட கோபிந்த் சிங் வலியுறுத்தல்

கோலாலம்பூர், மே-15-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விசாரணை அறிக்கையை பொது மக்களுக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

​கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய வங்கியாளர் உச்சநிலை மாநாட்டில் பேசிய கோபிந்த், அசாம் பாக்கியின் பங்குதாரர் சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

தேசிய சட்டத்துறைத் துறைத் தலைவர் தலைமையிலான இந்தக் குழு, தனது அறிக்கையை ஏற்கனவே அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

​இருப்பினும், இந்த விவகாரத்தில் அரசாங்கச் தலைமைச் செயலாளர் மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

DAP கட்சியின் தேசியத் தலைவருமான கோபிந்த் சிங், மக்கள் உண்மையை அறிய விரும்புவதால், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காக்கக்கூடாது எனச் சுட்டிக்காட்டினார்.

​அரசுப் பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக்கூடாது என்ற விதியை மீறி, அசாம் பாக்கி சுமார் 8 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் புகாரே இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாகும்.

கடந்த மே 12-ஆம் தேதி அவர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை ஆணையராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

​பதவி ஓய்வு பெற்றாலும், இந்த விசாரணை தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பொது மக்களுக்கு உரிமை உண்டு என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!