
வாஷிங்டன் , மே 16- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ ( Low Taek Jho ) அல்லது ஜோ லோ (Jho Low) தொடர்பாக மலேசியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) தெரிவித்தார்.
இந்த மன்னிப்பு விண்ணப்பம் அமெரிக்காவின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம் என்பதால், மலேசியா தலையிடாது என அவர் கூறினார். அதேவேளை, ஜோ லோவின் மன்னிப்பு கோரிக்கையை மலேசியா ஆதரிக்கவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.
Wall Street Journal (WSJ) வெளியிட்ட தகவலின்படி, 1MDB நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ஜோ லோ, அண்மையில் அமெரிக்காவில் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.
அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அவர் எதிர்கொள்ளும் அமெரிக்க குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



