Latestமலேசியா

படைப்பாற்றலை வெளிப்படுத்த அரிய வாய்ப்பு: ‘தர்மத்தின் வழி 8.0’ குறும்படப் போட்டிக்கான பதிவுகள் தொடக்கம்

பெட்டாலிங் ஜெயா, மே-18-மலேசிய இளம் படைப்பாளர்களின் கலைத்திறனையும், சிந்தனைகளையும் உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் (HISUM) பெருமையுடன் வழங்கும் “தர்மத்தின் வழி 8.0” (Dharmathin Vazhi 8.0) தேசிய அளவிலான குறும்படப் போட்டியின் அதிகாரப்பூர்வப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

திரையுலகின் 10 முன்னணி சினிமா ஆளுமைகளின் வழிகாட்டுதலோடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இப்போட்டியில், இறுதிப் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று முக்கிய சினிமா இயக்குநர்கள் நடுவர் இருக்கையை அலங்கரிக்கவுள்ளனர்.

இப்போட்டியின் நோக்கம் குறித்து வணக்கம் மலேசியாவிடம் விவரிக்கிறார் திட்ட இயக்குநர் தினேஸ்வரன் ஆனந்தராஜா..

வெற்றி பெறும் சிறந்த படைப்புக்கு 3,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்தாண்டு கிடைத்த வரவேற்பைப் போல இவ்வாண்டும் நல்ல வரவேற்பை எதிர்பார்ப்பதாக, திட்ட துணை இயக்குநர் தர்ஷினி சந்திரன் கூறினார்.

இவ்வாண்டு இப்போட்டி இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது.

A பிரிவில் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், மெட்ரிகுலேஷன் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும், B பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்கலாம்.

தங்களின் சினிமா கனவை நனவாக்க விரும்பும் ஆர்வம் கொண்ட இளையோர், வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு 018-2828270 என்ற எண்களில் தினேஸ்வரனை தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!