
குவாந்தான், மே 19 – பூனை மற்றும் அதன் குட்டிகள் இருந்த பெட்டியை தூக்கி வீசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, 44 வயதுடைய வியாபாரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவரது செயல் காரணமாக ஆறு பூனைக்குட்டிகள் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதை அவர் மறுத்ததுடன், தாய் பூனையும் குட்டிகளும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
உணர்ச்சிவசப்பட்டு தவறாக நடந்துகொண்டேன் என்றும் எந்த குட்டியும் இறக்கவில்லை என்றும் தற்ப்பொது பூனை மற்றும் குட்டிகளை மீண்டும் கடைக்குள் கொண்டு வந்து உணவு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டதால், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.



