
ஷா ஆலாம், மே-19-“ஷா ஆலாம் – Elora Global நிறுவனம், ஆசிய வணிக கோல்ஃப் போட்டி 2026-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் பட்டத்து இளவரசர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மலேசியாவை ஆசியாவின் நிறுவன கோல்ஃப் மையமாக உயர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இப்போட்டி, Kota Permai Golf & Country Club-யில் தொடங்கி, நாடு முழுவதும் நடைபெறும் தகுதிச் சுற்றுகளின் மூலம், அக்டோபரில் லங்காவி The Els Club Teluk Datai-ல் தேசிய இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.
இவ்வேளையில், “இது ஒரு போட்டி மட்டுமல்ல, ஆசிய வணிகத் தலைவர்களை இணைக்கும் மேடையாகும்.
விளையாட்டு, ஒத்துழைப்பு, மற்றும் வட்டார ஒற்றுமையை ஊக்குவிக்கும் முயற்சி” என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஹாஜி Mohd Salim Mohamed Sain வலியுறுத்தினார்.
இந்த கோல்ஃப் போட்டி, lory, Strength, Legacy என்ற கோட்பாட்டின் கீழ், வணிகமும் விளையாட்டும் இணையும் புதிய அத்தியாயத்தை மலேசியாவில் தொடங்குகிறது.



