
நியூ யோர்க், மே-23-அமெரிக்காவின் நேவார்க்கிலிருந்து (Newark) குவாட்டமாலா (Gueatamala) நோக்கி 145 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த United Airlines விமானத்தில் நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் திடீரென அவசர கால கதவைத் திறக்கத் முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவரைத் தடுக்க முயன்ற போது, அந்த நபர் அருகில் இருந்த ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, விமானி உடனடியாக அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, விமானத்தை Washington Dulles விமான நிலையத்திற்குத் திருப்பி, பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
அங்கு தயாராக இருந்த FBI மற்றும் பாதுகாப்புப் படையினர், அந்த விபரீத செயலில் ஈடுபட்ட பயணியைக் கைதுச் செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை.
தொழில்நுட்ப ரீதியாக, வானில் பறக்கும் விமானத்தின் கதவை மனித சக்தியால் திறப்பது சாத்தியமில்லை என்றாலும், சக பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அந்த நபருக்குக் கடுமையான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



