
பாசீர் மாஸ், மே-26-கிளந்தானில் இரண்டு சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் படங்களை எடுத்ததாக, ‘ustaz’ எனப்படும் சமய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், தம் மீதான அனைத்து 4 குற்றச்சாட்டுகளையும் பாசீர் மாஸ் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
31 வயது Faiz Ramly, மே மாதம் ஜெலியில் உள்ள மதராஸா மற்றும் குடியிருப்பு ஒன்றில் 8 வயது மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுவர்களைப் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதோடு, பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை ஆபாசமாகப் படம் பிடித்ததாக மூன்றாவது நான்காவது குற்றச்சாட்டும் பதிவாகின.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட செவிமெடுப்பை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.



