Latestமலேசியா

அவசரத் தடத்தில் நிறுத்தப்பட்ட SUV வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதும் காட்சி வைரலானது

கோலாலம்பூர், மே-28- அவசர வழிதடத்தில் நிறுத்தப்பட்டிருந்த SUV வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதும் டாஷ்கேம் வீடியோ, விரைவுச் சாலைகளில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு மற்றும் பார்வைத் தெளிவு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட 28 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், அவசர வழிதடத்தில் சென்ற மோட்டார் சைக்கில் நிறுத்தப்பட்டிருந்த SUV வாகனம் மீது மோதுவதை காணமுடிந்தது.

SUVயின் பிரேக் விளக்குகளும் அபாய விளக்குகளும் எரியவில்லை என்பதோடு , அந்த வாகனத்தின் பின்னால் எச்சரிக்கை முக்கோணமோ அல்லது பாதுகாப்புக் கூம்புகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை.

இது, போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதத்தையும் தூண்டியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த சரியான இடம், நேரம் மற்றும் சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!