Latestமலேசியா

இடைநிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு RM100 புத்தக பற்றுச் சீட்டு – பிரதமர்

கோலாலம்பூர், மே 29 -கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், நாடு தழுவிய பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடானி புத்தக பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ்100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும்.

மலேசியர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அறிவு மேம்பாட்டை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த வவுச்சர்களை கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பொருளாதார சவால்களை அரசாங்கம் எதிர்நோக்கிய போதிலும் , கல்விக்கும் புத்தகங்களுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நாடு, வலுவான அறிவுக் கலாச்சாரம் மற்றும் பரந்த அறிவுத்திறன் கொண்ட ஒரு உண்மையான நாகரிக நாடாக மாற வேண்டுமானால், நாம் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும்

இது கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தாலும், புத்தகங்கள் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தாம் நிதி அமைச்சிடம் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

எனவே, நாடு முழுவதும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், உயர்கல்வி அமைச்சின் கீழ் கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தலா 100 ரிங்கிட் தொடர்ந்து வழங்கப்படும் என கோலாலம்பூர் அனைதுலக புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!