
கோலாலாம்பூர், மே-30-மலேசியாவின் முன்னணி லாட்டரி நிறுவனமான மெக்னம், வாடிக்கையாளர்களின் மனநல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யும் ‘பொறுப்பான சூதாட்ட’ உன்னத உலகத் தரச் சான்றிதழைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
உலக லாட்டரி சங்கத்தின் ‘பொறுப்பான சூதாட்டக் கட்டமைப்புக்கான’ உயரிய மூன்றாவது நிலைச் சான்றிதழைப் பெற்றுள்ள மெக்னம், பந்தய விளையாட்டுகளைப் பொழுதுபோக்காக மட்டுமே அணுக வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் நிதி நிலைக்கு ஏற்பப் பாதுகாப்பான சூழலில் விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில், சூதாட்டச் செலவுகளைக் கணக்கிடும் டிஜிட்டல் கருவி மற்றும் சுயமதிப்பீட்டுப் படிவங்களையும் மெக்னம் வெளியிட்டுள்ளது.
மேலும், இப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கு வழிகாட்ட, ‘சூதாட்ட மறுவாழ்வு மையத்துடன்’ இணைந்து நிறுவனம் செயலாற்றி வருகிறது.
நாடு முழுவதும் 485 விற்பனை முகப்புகளைக் கொண்டுள்ள மெக்னம், மிக உயர்ந்த நேர்மை மற்றும் பாதுகாப்புத் தரத்துடன் தனது சேவையை வழங்கி வருகிறது.
‘பொருளுணர்ந்து பொறுப்புடன் விளையாடுவதே சிறந்த வழி’ என்ற மெக்னமின் இந்த விழிப்புணர்வுத் திட்டம், வணிகத் துறையில் ஒரு நல்ல முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.
மேல் விபரங்களை ‘Magnum Cares’ ஃபேஸ்புக் பக்கத்தில் அறியலாம்.



