Latestமலேசியா

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: தற்போதைய தொகுதிகளை தக்கவைக்க DAP முடிவு – அந்தோனி லோக்

கோலாலம்பூர், ஜூன் 5 – வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் (PRN), தாங்கள் தற்போது வைத்திருக்கும் அனைத்து தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதுடன், ஜோகூரில் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிட DAP திட்டமிட்டுள்ளது.

DAP-யின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக், கூடுதல் தொகுதிகளின் இறுதி எண்ணிக்கை பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றும், அது இந்த வார இறுதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளதால், 2026 ஜூன் 1 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவிருந்த DAP தேசிய மாநாடு ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத் தேர்தலுக்கான DAP வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அந்தோனி லோக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!