Latestஉலகம்விளையாட்டு

மைதானத்தில் டென்மார்க் காற்பந்து விளையாட்டாளர் எரிக்சன் மீண்டும் மயங்கி விழுந்தார்

பாரிஸ், ஜூன்-8-பாரிஸ் யூரோ 2020 காற்பந்து போட்டியின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் மத்தியதிடல் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen ) இன்று அதிகாலை உக்ரைனுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தின்போது போது மயங்கி விழுந்தார்.

மைதானத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, 34 வயதான அவர் சுயநினைவுடனும் சீரான நிலையிலும் இருப்பதாக டென்மார்க் காற்பந்து சங்கம் தெரிவித்தது.

ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில், டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அதன்பின் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து உதவி செய்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு நடுவர் ஆட்டத்தை நிறுத்தியதோடு , பின்னர், பரிசோதனைக்காக எரிக்சன் ஒடென்ஸில் (Odense) உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அந்த வீரர் தற்போது பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பின்லாந்துக்கு எதிரான யூரோ 2020 பி பிரிவுக்கான ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து எரிக்சன் பேஸ்மேக்கரைப் பயன்படுத்தி வருகிறார்.

அவர் சிறிது நேரம் சுயநினைவின்றி இருந்ததோடு , பின்னர் விரைவாக மீண்டதாகவும் டென்மார்க் அணியின் மருத்துவர் மோர்டன் போசென் ( Morten Boesen ) கூறினார்.

எரிக்சன் நல்ல நிலையில் இருந்ததாகவும், அவரது பேஸ்மேக்கர் சரியாக இயங்க, அவர் தாமாகவே மைதானத்தை விட்டு வெளியே நடந்து சென்றதாகவும் போசென் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!