Latestமலேசியா

பிள்ளைகளின் கனவுகளுக்காகப் போராடும் ஒவ்வொரு தந்தையும் மாவீரனே – விக்னேஸ்வன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன்-20 – குடும்பத்தின் நலனுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு, பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கப் போராடும் ஒவ்வொரு தந்தையும் ஒரு மாவீரனே…

ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தனது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் அவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார்.

“​நானும் ஒரு தந்தைதான்” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்ட அவர், இன்றைய சவாலான காலகட்டத்தில் ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து பணம் அல்ல; ஒழுக்கம், நேர்மை மற்றும் சமுதாய அக்கறைதான் என்றார்.

குடும்பத்தை மட்டுமல்லாமல், இந்தச் சமூகத்தையே செதுக்கும் சிற்பிகளாகத் திகழும் தந்தையர்களின் தியாகங்கள் என்றும் போற்றுதலுக்குரியவை.

இந்நிலையில் அனைத்துத் தந்தையர்களும் தங்கள் குடும்பத்தின் வெற்றிக்குத் தொடர்ந்து உந்துசக்தியாக விளங்க வேண்டும் எனத் தனது மனமார்ந்த வாழ்த்துகளை விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!